ஐவர்மலை என்னும் அயிரமலை
அயிரமலை எங்கள் ஐவர்மலை ஐவர்மலை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் மேற்கில் உள்ளது. சண்முக நதியின் மேற்கு கரையில் வண்டி வாய்க்கால் என்னும் இடத்தில் இடதுபக்கம் பிரிந்து கொழுமம் செல்லும் வழியில் பாப்பம் பட்டி பிரிவுக்கு அருகில்சாலையின் இடது புறம் பிரிவுப்பாதையில் செல்லவேண்டும். பிரிவின் முகப்பில் ஆர்ச் கட்டப்பட்டு இருக்கும் இதன் வழியாக சென்றால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு மலைகள் இருக்கும் இந்த இரு மலைகளில் பாதையின் கிழக்கில் உயர்ந்த மழையும் அதன் எதிர்புறம் சாலையின் மறுபுறம் மேற்கில் உள்ள மலையே ஆயிர மலையாகும். மான்களும் மயில்களும் சோலைகளும் இல்லாத புஞ்சைக்காடாகும் இது கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அயிரை மலை என்று சங்க இலக்கியங்களிளும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறது. அயிரை என்ற சொல்லுக்கு மீன், கொற்றவை, என்று பொருள்கள் உண்டு. இம்மலையின் இடைநிலையில் யக்க்ஷி கோவில் உள்ளது. இது ஒரு சமணப் பள்ளியாக இருந்துள்ளது. இங்கு சமண சிற்ப்பங்கள் காணப்படுகின்றன. இயக்கி, யக்க்ஷி உருவங...