ஐவர்மலை என்னும் அயிரமலை
அயிரமலை எங்கள் ஐவர்மலை
ஐவர்மலை திண்டுக்கல்
மாவட்டம் பழனியில் இருந்து சுமார் பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் மேற்கில் உள்ளது.
சண்முக நதியின் மேற்கு கரையில் வண்டி வாய்க்கால் என்னும் இடத்தில் இடதுபக்கம்
பிரிந்து கொழுமம் செல்லும் வழியில் பாப்பம் பட்டி பிரிவுக்கு அருகில்சாலையின் இடது
புறம் பிரிவுப்பாதையில் செல்லவேண்டும். பிரிவின் முகப்பில் ஆர்ச் கட்டப்பட்டு
இருக்கும் இதன் வழியாக சென்றால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு மலைகள்
இருக்கும் இந்த இரு மலைகளில் பாதையின் கிழக்கில் உயர்ந்த மழையும் அதன் எதிர்புறம்
சாலையின் மறுபுறம் மேற்கில் உள்ள மலையே ஆயிர மலையாகும்.
மான்களும் மயில்களும்
சோலைகளும் இல்லாத புஞ்சைக்காடாகும் இது கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அயிரை மலை
என்று சங்க இலக்கியங்களிளும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறது. அயிரை என்ற
சொல்லுக்கு மீன், கொற்றவை, என்று பொருள்கள் உண்டு. இம்மலையின் இடைநிலையில் யக்க்ஷி
கோவில் உள்ளது. இது ஒரு சமணப் பள்ளியாக இருந்துள்ளது. இங்கு சமண சிற்ப்பங்கள்
காணப்படுகின்றன. இயக்கி, யக்க்ஷி உருவங்களும் கனாப்படுகின்றன. சமணர்களின் இருபத்து
நான்கு தீர்த்தங்கர்களில் இருபத்தி மூன்றாவது தீர்ந்தங்கராரான பார்சுவநாதர் சிற்பம்
உள்ளது. மானாக்கியர் இச் சிறபங்களைச் செய்துள்ளார். இங்குள்ள தெய்வத்தை ஸ்ரீ அயிரை
மலை தேவர் என்று குறித்து உள்ளனர். இச்சமனத் தீர்த்தங்க்கர் உருவங்களை
காலப்போக்கில் மகாபாரதக் கதையின் தாக்கம் வலுப்பெற்ற காலத்தில் இவர்களை
பாண்டவர்கலாகவும் அழைக்கத் தலைப்பட்டனர்.
அது போல் இங்குள்ள பெண்
தெய்வத்தை துரோபதை என்று அழைத்து வருகின்றனர். ஐவர்மலை கல்வெட்டுகளில் யஷி
வழிபாட்டிற்கு நிவந்தங்கள் கொடுத்ததைப் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. பஞ்ச
பாண்டவர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை புராணக் கருத்துப்படி தற்போதைய
நிகழ்வு காலம் கலியுகம் என்று கூறப்படுகிறது.இந்தக் கலியுகத்தின் முந்தய யுகத்தில்
மகாபாரத சம்பவங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி 5000 வருடங்களுக்கு முந்திய நிகழ்வாகும். தமிழ் மொழி எழுத்துருப் பெற்று
நடை முறைப் படுத்துவதே 3000 ஆண்டுகளுக்கு சற்று முன்
பின்னாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் அது போல் வேதங்கள் நடை
முறைக் காலாமும் 5000 வருடங்களுக்கு
உட்பட்டதே ஆகும் இதன் படி பார்க்கும் போது புராண வழக்குப்படி ஐவர் மலை என்ற பெயர்
வழக்கு புராண இதிகாசங்கள் உண்டாக்கப்பட்ட பிற்கால மாக்கம். அதுவும் வட மொழியில்
தோன்றிய மகா பாரதக் கதைகளின் கருத்தாக்கம் பல்லவர்களின் வருகைக்கு பின்
ஏற்ப்பட்டதாகும். ஆனால் அதற்க்கு முன்பே சமண மதம் தமிழ் நாட்டிற்குள் நுழைந்து
விட்டது. துரோபதை அம்மன் கோயிலுக்கு மேல் உள்ள பகுதியில் சுமார் 30 அடி நீளத்திற்கு 6 பகுதிகளாகப் பிரித்து
16 சமண தீர்த்தங்கரர் உருவங்கள் உருவங்கள்
செதுக்கப்பட்டு உள்ளன.
பாற்சுவ நாதரைத் தவிர
மற்றவை அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டு உள்ளது. பார்சுவனாதருக்கு நாகம் குடை போல்
அமைய மற்றவர்களுக்கு முக்குடை உள்ளது இயக்கன், இயக்கி உருவங்கள் சாமரம் வீசும்
நிலையில் செதுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வெட்டப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டின்
மேல் ஒரு தீர்த்தங்கரர் உருவம் பொறிக்கப் பட்டு உள்ளது. இது 10 ஆம் நூற்றாண்டாகலாம். ஒவ்வொரு சிற்பமும் சுமார் 18 அங்குலம் அதாவது ஒன்றை அடி உயரம் உள்ளன.
இம்மலை கடல் மட்டத்தில்
இருந்து 1400 அடி
உயரத்தில் உள்ளது. சமண மதம் கி.பி.8, 9 ஆம் நூற்றாண்டுகளில் சமண மதம் பாண்டிய நாட்டில் இருந்து பழனி வழியாக
பரவியது அக்கால கட்டத்தில் தமிழகத்தில் படுக்கைகள் வெட்டிக் கொடுக்கும்
பழக்கத்தைக் கைவிட்டு புடைச் சிறப்பங்கள் ஏற்படுத்தினர். 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தீர்த்தங்கரர் உருவங்கள் திரு மூர்த்தி
மலையில் உள்ளன. பெண் தெய்வ வழிபாடு தென்னிந்தியாவில் பண்டைக் காலத்தில் இருந்தே
இருந்திருக்கின்றது. சமணர்களும் தாங்கள் மதத்தைப் பரப்பும் நோக்கத்தோடு பிற
மதங்களுக்கு ஈடு கொடுக்கும் நோக்கத்தோடு பெண் தெய்வ வழிபாட்டை சிறப்பித்தனர்.
தீர்த்தங்கரர்களின் வலது பக்கம் யஷி உருவம் அமைக்கப்பட்டது. ஆனைமலை போன்ற
இடங்களில் யஷி உருவங்களும், ஐவர்மலை, கழுகுமலை, திருச்சாரணத்து மலை பஞ்ச பாண்டவர்
மலை ஆகிய இடங்களில் உள்ள கள் வெட்டுகளில் யஷி வழிபாட்டிற்கு நிவந்தங்கள்
கொடுத்ததைப் பற்றி குறிப்புகளும் காணப்படுகின்றன.
பெண் ஆசிரியைகள்
குறத்தியர், குறத்தி அடிகள் என்று குறிக்கப்படுகின்றனர். பல மடங்களும்
பள்ளிகளுக்கும் பெண்கள் தலைமை வகித்ததையும் அறியலாம். ஐவர்மளையிலும் சமணப்
பெண்களுக்கு முக்கிய இடம் கொடுத்து உள்ளனர்.மான்னாக்கியர் குறத்தியர் என்ற
பெயர்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன. சமணர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க
மாட்டார்கள் என்ற கருத்தை மறுக்கும் வகையில் ஐவர்மலை கல் வெட்டில் வரும் பெண்கள்
பற்றிய குறிப்புகளை உருவங்களைச் சான்றாகக் கூறலாம்.
ஆனால் காலப் போக்கில்
சமணம் சைவ மத வெறியர்களால் வெளியேற்றப்பட்டு பிற்காலத்தில் மகாபாரதக் கதைகளின்
தாக்கம் மெல்ல மெல்ல அரசர்களின் ஆதரவால் மக்கள் மனதில் திணிக்கப்பட்ட பின் யஷிகளை
துரோபதை (பாஞ்சாலி) வழிபாட்டை புகுத்தி விட்டனர். இதன் காரணமாகவே மக்கள்
மத்தியிலும் துரோபதை வழிபாடு புகுந்தது. துரோபதை என்னும் பாஞ்சாலியை வணங்க
ஆரம்பித்தனர். ஐவர்மலையில் இன்றும்
துரோபதை வழிபாடு சிறப்பாக உள்ளது. யஷி வழிபாடு ஐவர்மலையில் சிறப்புற்று இருந்தது
என்பதற்கு ஆதாரமாகக் கல்வெட்டுக்கள் இயக்கி அவ்வை போன்ற பெண் உருவச் சிற்பங்களைப்
புதுப்பித்தாக கூறுகின்றன. ஐவர் மலையில் துரோபதை வழிபாடு இன்றும் கொண்டாடப்
படுகிறது. ஐவர்மலை கல்வெட்டில் வணிகர்கள் காசு பொன் போன்றவற்றை தானமாக
கொடுத்திருக்கின்றனர். ஐவர் மலையில் இப்பொழுதும் துரோபதை முருகன், இரமாளிங்க
அடிகள் வழிபாடு நடந்து வருகிறது. இவ்வட்டாரத்தில் உள்ளவர்கள் இங்கு திருமணங்களை
நடத்திவருகின்றனர். சிவராத்திரி விழா இம்மலையிலாண்டு தோறும் சிறப்பாக
நடத்தப்படுகிறது. ஆடி அம்மாவாசையில் துரோபதை அம்மானில் கோயிலில் அன்னதானம்
செய்கின்றனர். ஐவர் மலைக்கு அருகில் உள்ள பாப்பம் பட்டியில் உள்ள ஜமின்தார்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக செய்கின்றனர். இந்த ஐவர்மலையில் உள்ள துரோபதை
அம்மன் என்பதற்கு வீரமாத்தி என்றும் அழைப்பர். அதன் படி எங்கள் குடும்பத்தார்
வழிபாடு செய்து வருகின்றனர். எங்கள் குடும்பத்தின் வழித்தோன்றலான சுந்தர் .C இக்
கோயிலுக்கு கீழிருந்து துரோபதை அம்மன் கோயில் வரை படிகள் கட்டி கொடுத்துள்ளார். நாங்கள்
வருடா வருடம் ஆடி மாதத்தில் இங்கு வந்து பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து
வழிபாடு செய்து வருகிறோம். வீரமாத்தி என்பதற்கு அக்கினியில் இருந்து தோன்றியவள்
என்பதாக மகபாராதக் கதையின் படி வந்த காரணப் பெயராகும். மற்றும் இவ்வூருக்கு
அருகில் உடுமலையில் அமராவதி ஆணை, திருமூஒர்த்தி மலை ஆணை குதிரையாறு ஆணை முதலிய அணைகளும்
இங்கு இருந்து கிழக்கில் பழனி மழையும் அதன் அருகில் வரதமாநதி பாலாறு ஆணை
கண்ணாடியப் பெருமாள் கோவில் அம்மாவெட்டியான் (பரசுராமர்) கோயில் மருதகாளியம்மண்
கோயில் பெருஆவுடையார் கோவில்களும் உள்ளன.
எங்கள் முன்னோர்கள்
திருச்சி திருவானைகவல் என்னும் ஊரில் வாழ்ந்த தாகவும் அப்போது ஒரு சமயம் ஏற்பட்ட
பஞ்சத்தின் காரணமாக அங்கிருந்து குடி பெயர்ந்து தாராபுராம் வழியாக வந்து சிலர்
தாரபுரத்திலும் சிலர் பழனியிலும் தங்கி உள்ளனர். பழனிக்கு 200, வருடங்களுக்கு முன் வந்த மாரியப்பபிள்ளை அவரதுச கோதரி வீரம்மாள் ஆவர்,
இவர்களின் வழித்தோன்றல்களான இப் பெருந்தகையாளர் பழனியில்
செங்கல் சுட்டு வியாபாரம் செய்து வந்தனர். அவருக்கு மூன்று ஆண்மக்களும் ஒரு பெண்
குழந்தையும் பெற்று வாழ்ந்து வந்தனர். இம் மக்களில் மூத்தவர் கந்தசாமி பிள்ளை தன்
தகப்பனாரின் செங்கல் தொழிலோடு மருத்துவத் தொழிலும் சேர்த்து செய்து வந்தார் பின்
ஊராரின் வேண்டுதல் படி மருத்துவத் தொழில் மட்டும் பார்த்துவந்தார். அவரது தமையனார்
பழனியப்பா பிள்ளை வேலுப்பிள்ளை இருவரும் தன அன்னாரிடம் பாசமும் நேசமும் கொண்டு
அண்ணார் வழி நடத்தலின் படி பழனியப்பா பிள்ளை கட்டிட காண்டிராக்ட் வேலைகளும்,
வேலுப்பிள்ளை செங்கல் தொழிலும் நடத்தி வந்தனர். அவர்களின் வாரிசுகலான் மூத்தவரின் மகன் சபாபதி, மகள் பாஞ்சாலியும், பழனியப்பா
பிள்ளை மக்கள் மாரிமுத்து, சிதம்பரம், வெங்கடாசலம், இராஜேந்திரன் என்ற நான்கு
ஆண்மக்களும் வேலுப்பிள்ளையின் மகன் இராசுப்பிள்ளையும் இவர்களின் வழித் தோன்றல்கள்
கந்தசாமி, சண்முகநாதன், நாகரத்தினம் பழனிச்சாமி, குணசேகரன் இராஜா, சுந்தர் சரவணன்
ஞானாந்தன் இவர்களின் வழித் தோன்றல்களான விமல் வெங்கடேஷ், காந்தராஜ் மோகன் சிவா சூரியா
என்று பல்கிப் பெருகி இன்றும் இக் கோவிலில் இறை வழிபாடு செய்து வருகின்றனர்.
சிவா & சூரியா
சிவா & சூரியா ராசா செந்திலின் செல்வங்கள்
எங்கள் பங்காளிகள் உறவினர்
ஐவர்மலை மலை அடிவாரத்தில் சுந்தர் c யுடன் விமல் - வெங்கடேஷ் - சங்கர் என்ற கந்தராஜ்
மலை அடிவாரத்தில் உறவினர்கள்
சிவா & சூரியா ராசா செந்திலின் செல்வங்கள்
குறிப்பு -- இந்தத் தளத்தை வெளியிட்டு மேற்கண்ட குறிப்புகள் வெளியிட்டதின் நோக்கம் எங்கள் குடும்ப பின் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இதனால் எனது கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து நான் எவ்விதத்திலும் பின்வாங்கவோ இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்








விமல் குழந்தை யுவதி மொட்டை அடித்த நிகழ்வில் துரோபதை அம்மன் கோவில்லில் இருந்து லாடசன்யாசி சமாதிக்கு போகும் படியில் எடுத்த போடோ 










nice tech news in tamil
ReplyDelete